உலகம் முழுக்க இஸ்லாமிய பெண்கள் எல்லா நாடுகளிலும் ஹிஜாப் அணிகிறார்கள்! இது முகத்தை மறைக்கும் உடையல்ல! இந்த முக்காடு வழக்கம் வட இந்திய பெண்களிடமும் உண்டு! ஹிஜாப் தடைக்கு ஆதரவாக கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கப்படுமா? ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடகத்தின் உடுப்பி இஸ்லாமிய மாணவிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றே! ஏனெனில், இந்த ...
நீதிமன்றமே கண்டித்துள்ளது. சட்டவிரோதமாக டாஸ்மாக் பார்களை 18 ஆண்டுகளாக தமிழக அரசே நடத்தி வந்துள்ளதாம்! அதனால், அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதங்களுக்குள் மூடவேண்டுமாம்!, சமீபத்திய பார் டெண்டர்களும் ரத்தாகிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன? தமிழ்நாட்டில் மது கலாச்சாரத்தை அதிகப்படுத்தி வளர்த்து எடுப்பதில் திமுக, அதிமுக இடையே எந்த வித்தியாசமும் இல்லை. மது விற்பனையோடு இருந்தால் கூட ஓரளவு மது பழக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், மதுக் கடைகளுடன் பார்களை நடத்துவது தூண்டில் போட்டு குடிகார்களை அழைக்கும் முறையாகும்! ...
பல நேரங்களில் இவரது தீர்ப்பை படிக்கும் போது நீதித்துறையின் மீது மட்டுமல்லாது, இந்த சமூகத்தின் மீதே ஒரு நம்பிக்கை பிறக்கும்! ”எளிய மக்களின் ஏக்கங்களையும், நோக்கங்களையும் உள் வாங்கி அவர்களின் மனசாட்சியாக இவர் வெளிப்படுகிறாரே..!” என்று வியந்த நிகழ்வுகள் பற்பல! நீதித் துறையில் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை ஒரு சிறிதும் புரிந்து கொள்ளாமல் காவல்துறைக்கு ஆதரவாகவும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் தீர்ப்பு சொல்லக் கூடியவர்களை பார்த்தும், கேட்டும், வெறுப்பும், விரக்தியும் அடைந்த பெருந்திரளான மக்களின் மாற்று எதிர்பார்ப்பாக நீதிபதி என்.கிருபாகரன் வெளிப்பட்டார். சில நீதிபதிகள் சமூகத்தில் இருந்து ...
நீதித்துறையில் ஜாதி உணர்வு இருக்கிறதா? ’’ஆம், இருக்கிறது, சந்தேகமில்லை!’’ நீதிபதிகளும் குற்றங்கள் செய்பவர்களா? ’’ஆம்,செய்பவர்களே!’’ நீதிபதிகள் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களா? ’’இல்லை! நூற்றில் ஒரு நீதிபதி இருக்க வாய்ப்புண்டு!’’ இந்த சமூகத்தில் என்னென்ன உன்னதங்கள்,சிறப்புகள் உள்ளனவோ, அவை நீதிகளிடமும் உள்ளன! இந்த சமூகத்தில் என்னென்ன பலவீனங்கள்,குற்றங்களுள்ளனவோ அவை நீதிபதிகளிடமும் உள்ளன! அவர்களும் இந்த சமூகத்தின் உருவாக்கம் தானே! நீதிபதிகளைக் குறித்து நமது அறம் இணைய இதழில் ஏற்கனவே எழுதியுள்ளேன். நீதித்துறையின் மீதான பாலியல் புகார்களை நிராகரிப்பதா? ஆனால், தன்னை சுற்றியுள்ள பாசிடிவ் அம்சங்களை பார்க்கத் தவறி, ...
எத்தனையோ பரபரப்பு செய்திகளுக்கு இடையே கடந்த 28ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்த வழக்கு ஒன்று சமூக ஆர்வர்களிடையே அதிர்வை ஏற்படுத்தியது. முன்னணி செய்தி ஊடகங்கள் அனைத்தும் அந்த செய்தியை கட்டம் கட்டி வெளியிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி முதலமைச்சர் தலைமையில் ஆண்டுக்கு இரு முறை கூட்டப்பட வேண்டிய கூட்டம் 2013 முதல் தமிழ்நாட்டில் இதுவரை கூட்டப்படவில்லை என்று அரசே பகிரங்கமாக உயர்நீதி மன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது என்பதே அந்த வழக்கில் வெளிப்பட்ட செய்தி. இந்த கூட்டம் நடைபெற ...