’’வாவ்… நீதிமன்றமே இப்படி கேட்டுவிட்டது!’’ ’’சபாஷ் நீதிபதிகள்! மக்கள் மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிச்சிருக்கார்ப்பா…’’ கூட்டத்தின் கைதட்டலுக்காக பேசும் மேடை பேச்சாளர்கள் குறிப்பாக தொழில்முறை பேச்சாளர்கள் பேசுவதைப் போல நீதிபதிகளும் சமீப காலமாகப் பேசிவருகின்றனரோ..என்ற சந்தேகம் சில நாட்களாக எனக்கிருந்தது! ஒரு முறை என் நண்பனிடம் சொன்னபோது, ’’அடச்சே..உனக்கு மட்டும் தான் இது போன்ற சந்தேகம் வரும்…’’ என்று என கிண்டலடித்தான்! ’’ஊழல் அதிகாரிகளை ஏன் தூக்கிலிடக் கூடாது?’’ என்று மதுரை ஹைகோர்ட் கேட்டவுடன் என் சந்தேகம் தீர்ந்துவிட்டது! இந்த நீதிபதிகள் ஏதோ வானத்திலிருந்து ...