ஒட்டுமொத்த இந்தியாவே கொரோனாவில் அசைவற்றுக் கிடந்த மே மாதம் தமிழக நெடுஞ்சாலைத்துறை மட்டும் தகதகவென வேலைகளை செய்தது என்றால்.சும்மவா? ஒரு பக்கம் கொரானா மரணங்கள், மறுபக்கம் பொருளாதார பின்னடைவுகள்,வேலை இழப்புகள் என்று அல்லோகலப்பட்ட காலகட்டத்தில், ‘’ஆகா இது பொற்காலம் அள்ளுவோம் கோடிகளை’’ என தமிழக அரசு மட்டும் கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் எல்லாத் துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்து அரசுப் பணிகளை கடந்த மே மாதம்  முதல் செய்யத் தொடங்கி விட்டார்கள். பணிகளைச் செய்ய டெண்டர் விட்டால்தானே கமிஷன் பார்க்கமுடியும். ஆனால்,டெண்டராவது, ...

கட்டுக் கடங்கா ஊழல்,கொட்டமடிக்கும் அதிகாரிகள், தட்டிக் கொடுக்கும் தமிழக ஆட்சியாளர்கள்…! இது தான் இன்றைய தமிழக நெடுஞ்சாலைத் துறையின் தற்போதைய நிலைமை! தமிழ் நாடு நெடுஞ்சாலைத் துறையில் நிர்வாக வசதிக்காக தேசிய நெடுஞ்சாலை,  கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, நபார்ட் மற்றும் கிராமச் சாலைகள், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம், சென்னை – கன்னியாகுமரி தொழில் தட திட்டம், திட்டங்கள், பெருநகரம்,  வடிவமைப்பு,  நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், முதன்மை இயக்குநர் அலுவலகம்  என்று பத்து அலகுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறிய சதி திட்டங்கள்! தேசிய நெடுஞ்சாலைப் பிரிவில் ...