இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்சும், இந்து மகாசபை போன்ற இயக்கங்களும் வேரூன்றி, விருட்சமாக வளர்ந்து, இந்த நாட்டையே தங்கள் பிடிக்குள் வைத்திருக்கின்றன என்றால், அதற்கு இந்த பிராமண இதழ்கள் மறைமுகமாக எப்படி பங்களித்தன என்பதை காந்தி கொலையின் போது இவர்கள் எழுதிய தலையங்கங்களே சாட்சியாகும்! இன்றைய இந்து தமிழ் திசையில் காந்தி இறந்த போது வெளியான அன்றைய இந்து தலையங்கத்தை தமிழில் மொழி பெயர்த்து ஆவணப் பதிவாக வெளியிட்டு உள்ளனர். அந்த தலையங்கம் இப்படித் தான் ஆரம்பிக்கிறது; ”தேசப் பிதா மகாத்மா காந்தியடிகளை அறிவற்ற ஒருவர் புது ...

தாஜ்மகால் இருக்கும் இடம் யாரிடம் இருந்து எப்படி வாங்கப்பட்டது? அங்கு இந்து கோயில் இடித்து கட்டப்பட்டதா? ராம் மற்றும் சூலம் குறியீடுகள் உள்ளனவே? தொல்லியல் ஆய்வுகள் சொல்வது என்ன? அங்குள்ள ரகசிய அறைகளில் என்னென்ன உள்ளன? இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் தயாளன் நேர்காணல்! ஷாஜகான் முறைப்படி இந்த இடத்தை வாங்கினாரா?  மத்தியப்பிரதேசத்தில் ஷாஜகான் மனைவி மும்தாஜ் இறந்த நிலையில் உடலை 6 மாதம் அங்கேயே பாதுகாத்து வைத்து இருந்தனர். மும்தாஜுக்கு  உலகம் போற்றும் நினைவுச் சின்னம் கட்ட வேண்டும் என்ற தேடலில், ...

‘இந்து விரோத திமுக ஆட்சி ஒழிக! பிராமண துவேஷ திமுக ஆட்சி ஒழிக!’ என அரசியல் ஆயுதத்தை பாஜகவினர் கையில் எடுத்தனர்! ஆனால், ‘அயோக்கியர்களின் பிடியில் அயோத்தியா மண்டபமா?’ என்பதாக ஜெயலலிதா ஆட்சியில் தான், இது, அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது! நீதிமன்றமும் ஏற்றது! இதன் பின்னணி என்ன? திமுக அரசுக்கு எதிராக சுமார் ஐம்பது பேர் கூடி அயோத்திய மண்டப வாயிலில் கத்தினார்கள்! பாஜக அண்ணாமலை ஆர்பரித்தார்! பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தனோ, ”சென்னையிலேயே இந்த ஒரு பகுதியில் தான் வார்டு ...

மற்ற மதத்தினரை கொன்றொழிக்க வெளிப்படையாக அறைகூவல் விடுத்த பிரபல இந்து சாமியார்களின் கொலைவெறிப் பேச்சுகள் அதிர்ச்சியளிக்கின்றன என்றால், அதற்கு எதிர்வினையாற்றாமல் இருக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் மெளனம் ஜன நாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை கலவரப்படுத்துகிறது. உத்திரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் பிரபல இந்து சாதுக்களின் அமைப்பான தர்மசந்த் நடத்திய மதப் பாராளுமன்றம் என்ற நிகழ்வில் மிக அதிர வைக்கும் இந்து சாமியார்களின் வன்முறையை தூண்டும் வெறித்தனமான பேச்சுகள் வெளிப்பட்டுள்ளன! இந்து ரக்‌ஷ சேனா என்ற அமைப்பின் தலைவரான சுவாமி பிரபோதானந்த் கிரி, பிரபல சாமியார் ...

லட்சத்தீவில் நடப்பது நாளை இந்தியா முழுமைக்கும் பாஜக அரசு செயல்படுத்த உள்ள இந்து ராஷ்டிரா திட்டத்தின் முன்னோட்டமா..? என்ற சந்தேகம் மனசாட்சியுள்ள யாருக்கும் தோன்றக் கூடும்…! அதி மோசம், படு அநாகரீகம், கெடு நோக்கம் கொண்ட ஒரு இந்துத்துவ நிர்வாகத்திற்கான மாடலை அங்கு நிறுவிக் கொண்டுள்ளது பாஜக அரசு! இதனால், இந்திய அரசின் உயர் பொறுப்புகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐஎப்.எஸ் அதிகாரிகள் 93 பேர் பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த வருத்ததுடன் ஒரு கடிதம் எழுதியுள்ளனர். இவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின்வழி நடக்க வலியுறுத்தும் குழு ...