Home – ஆண்ட்ராய்டு போனைச் சுற்றி ஒரு குடும்பக் கதை! குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிதலையும், அன்னியோனியத்தையும் எப்படி கையாள்கிறோம் என்ற சுய பரிசீலனைக்கு நம்மை இந்தப் படம் கொண்டு செல்கிறது! தங்கள் சுய நலத்தை மட்டுமே மையப்படுத்தி சிந்திக்கும் இளம் தலைமுறையும், சகிப்புத் தன்மையுடன் அன்பை வெளிப்படுத்தும் முந்தைய தலைமுறையும் மிக இயல்பாக வெளிப்படுகின்றனர் இந்த குடும்பக் கதையில்! Home என்ற மலையாளப் படம் சமீபத்தில் வெளிவந்துள்ள படம். அமேசான் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு போன் ஒரு  குடும்பத்தை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதை. ...