சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு. சஞ்சீப் பானர்ஜீ மேகாலயா உயர்நீதி மன்றத்திற்கு ” நீதி பரிபாலனத்தை செவ்வன செய்யும் பொருட்டு” (better administration of justice) மாற்றப்படுகிறார் என்பது செய்தி. இச்செய்தி அனைவரையும் துணுக்கிட வைத்தது. காரணம் திடுதிப்பென்று இத்தகைய மாறுதலுக்கான காரணம் என்ன என்று எல்லோரும் மண்டையை பிய்த்துக் கொண்டாலும் விவரம் அறிந்தவர்கள், ”இம்மாறுதல் ஒருவகையில் எதிர்பார்த்த ஒன்றுதான் , ஏனெனில், பானர்ஜீ தன்னிச்சையாய் நடக்க கூடியவர், அதிகார மையங்களுக்கு வளைந்து கொடுக்காதவர், உண்மை மற்றும் சட்ட ஆதாரங்கள் அடிப்படையில் வழக்கை ...

அப்பழுக்கற்ற நேர்மையான சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமன் மறைந்துவிட்டார்! பெரும்பாலான காவல் துறை மற்றும் புலனாய்வு துறையினருக்கென்றே இயல்பாக இருக்கும் கள்ளம், கபடம், சூது என எதுவமற்ற ஒரு வெள்ளந்தி மனிதர் அவர்! அவரைப் போன்றவர்கள் அபூர்வத்திலும், அபூர்வம்.! எதையும் நேர்பட பார்க்கும் குணம், மனதில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள முடியாத மனோபாவம், சமரசமற்ற போக்குகள், உண்மை என்று உணர்ந்ததை யாருக்கும் அஞ்சாமல் மட்டுமல்ல, அதனால் தனக்கே கூட பாதிப்பு வரும் என்றாலும் கூட வெளிப்படுத்திவிடக் கூடியவர். இந்த குணங்கள் போதாதா..? அவர் என் ...