ஜெயலலிதா இறப்பு இன்னும் மர்மமாகவே தொடர்கிறது! மக்களுக்கு முதலில் அப்பல்லோ மீதும், சசிகலா மீதும் தான் அதிக கோபம் இருந்தது. ஆனால், தற்போது ஒ.பி.எஸ்சின் மீதும் அந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. எத்தனையெத்தனை மழுப்பல்கள், முரண்கள்! 50 கோடி செலவில் ஐந்தாண்டு விசாரணை எல்லாம் வீணா? ஜெயலலிதா மரணத்தில் பல ஆழமான சந்தேகங்கள் இன்னும் மக்கள் மனதை அழுத்திக் கொண்டே உள்ளன…! விசாரணை கமிஷன் அமைத்து மூன்றே மாதத்தில் அல்லது அதிகபட்சம் ஒரே ஆண்டில் உண்மையை வெளிக் கொண்டு வருவோம் என்றார்கள் ஓ.பி.எஸ்சும்,இ.பி.எஸ்சும்! உச்ச நீதிமன்றத்தில் ...