கோடைக் காலத்தை எப்படி சமாளிக்க போகிறோம். தகிக்கும் வெயிலை தாங்கிக் கொள்ள சுகிக்கும் உணவுகளை தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்! கோடைக்காலங்களில் சற்றே பாரம்பரிய உணவுகளின் பக்கம் கவனத்தை செலுத்துவது நம்மை காப்பாற்ற உதவும்! இது கோடையின் தொடக்க காலம். இப்போதே வெயில் சுட்டெரிக்கிறது. பருவ காலம் மாறும் போது அதற்கேற்ப நாம் நமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதில்லை. எப்போதுமே போலவே உண்கிறோம், உடுத்துகிறோம், உறங்குகிறோம். விளைவு, சில உடல் பாதிப்புகள், நலக் குறைவுகள் எட்டிப் பார்க்கின்றன. சிலருக்கு சிலநேரங்களில் கொஞ்சம் மோசமான சூழல் ஏற்பட்டுவிடுகிறது. ...