சமத்துவம், சமூக நீதி, சகல சமூகத்தவர்களுடன் இணக்கம், அநீதிக்கு எதிரான அசராத போர்க் குணம் ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்தவர்! நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து நிறவெறிக்கு எதிராக சலிக்காமல் போராடிய டெஸ்மன் டுடு, நாம் நினைவில் கொள்ள வேண்டிய மாமனிதர்! ஒரு பேராயராக உயர்நிலையில் வாழும் வாழ்க்கைச் சூழல் அவருக்கு இயல்பாக அமைந்த போதும், சக தென்னாப்பிரிக்க மக்களின்  சுதந்திரத்திற்காகவும், அவர்கள் அனுபவித்து வந்த நிறவெறிக்கு எதிராகவும்  ஓயாது குரல் கொடுத்து, அதனால் ஏற்பட்ட துன்பங்களை, இடையூறுகளை  சந்தித்து  மகத்தான வெற்றி கண்ட மாமனிதர் டெஸ்மன் ...