திருமணத்திற்காக அழகு நிலையத்தில் மணமகளுக்கு ஒப்பனை நடந்து கொண்டிருந்தது. மணமகன் முஸ்லிம் ;மணமகள் இந்து .இருவரும் அண்டை வீட்டார்கள். கடந்த வாரம் லக்னோவில், இரு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் திருமணம் நடைபெற இருந்த சமயத்தில், காவல்துறை இந்த திருமணத்தை அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இனி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு,அவரது அனுமதி பெற்றுதான் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புண்டு. உத்திர பிரதேசத்தில் அரசு இயற்றியுள்ள ‘லவ் ஜிகாத்’ அவசரச் சட்டத்தின் விளைவாக இது நடந்துள்ளது. ஒரே வீட்டில் ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமலேயே ...