ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,ஐ.எப்.எஸ் பணிவிதிகளில் திருத்தம் என்பதன் உள்ளடக்கமானது மாநில அரசுகளை, பேரசர்களுக்கு கப்பம் கட்டி வந்த சிற்றரசர்களின் நிலைக்கு தாழ்த்தி வைக்க முன்னெடுக்கும் சதித் திட்டத்தின் ஒரு அம்சமா..? என்ற சந்தேகம் வலுக்கிறது…! சுதந்திர இந்தியாவில் இது வரை எந்த மத்திய ஆட்சியாளர்களும் சிந்தித்து பார்த்திராத ஒரு சித்து விளையாட்டை இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் செய்வதன் மூலம் பாஜக அரசு செய்யத் துணிந்துள்ளது! மாநிலங்களில் பணிபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்போது, மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசின் பணிகளுக்கு ...

ஊழல் எதிர்ப்பு நோக்கு கொண்ட அறப்போர் இயக்கம்  2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டதாகும்.நேர்மையான அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பு. இதன் காரணமாக ஊழல் ஆட்சியாளர்களின் பாக்கெட்டுக்குள் போக இருந்த  பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணம் அரசு கஜானாவுக்கு ஒரளவு வந்துள்ளது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அறப்போர் இயக்கம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த பல்வேறு ஊழல் விவகாரங்களை கண்ணுற்ற மு. க. ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ஆளான சம்பந்தப்பட்ட ...

உண்மையிலே ஒரு நல்லாட்சி தர வேண்டும் என்ற நோக்கமும், ஆர்வமும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் தெரிகிறது. அவருடைய நோக்கத்திற்கு உகந்ததாக அதிகாரிகள் நியமனங்கள் இருக்கின்றனவா..? திமுக ஆட்சியின் ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பான பாராட்டுகள் ஊடகங்களில் குவிகின்றன. அமைச்சர்கள் நியமனங்கள், அதிகாரிகள் நியமனங்கள் பலத்த பாராட்டைப் பெற்றுள்ளன. புதிதாக பதவியேற்ற ஆட்சியாளர்களின் நோக்கங்களும், அணுகுமுறைகளும் அவர்கள் மீது நம்பிக்கையையும், மரியாதையையும் ஏற்படுத்துகின்றன…! உண்மை தான்! மாற்றுக் கருத்தில்லை. காரிருள் சூழ்ந்த தமிழக அரசியல் களத்தில் ஆங்காங்கே ஏற்றப்பட்டு வரும் மெழுகுவர்த்திகளே பெரும் நம்பிக்கையை விதைப்பனவாக உள்ளன. தோற்றுப் ...