சென்னை ஐஐடி, ஒரு உயர் கல்விக்கான நிறுவனம்! ஆனால், அதில் துயர் மரணங்களும், மாணவிகள் பாலியல் துன்புறுத்தல், சாதியப் பாகுபாடு குற்றச்சாட்டுகள் போன்றவையும் தொடந்து நடந்த வண்ணம் உள்ளன! ஆனால், அவற்றில் சட்டப்படியான நடவடிக்கைகள் என்பது சாத்தியமில்லாமலே போய்க் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? 2018 தொடங்கி தற்போது வரையில் சென்னை ஐஐடியில் ஆறேழு மாணவ,மாணவிகள் மரணித்துள்ளனர். கொலையா அல்லது தற்கொலையா என வகைப்படுத்த முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு இந்த மாணவர்கள் இறப்பதும், அவை தொடர்பான பல உண்மைகள் வெளி வந்தும் இன்று ...