பணம், அதிகாரம், புகழ் இவற்றோடு இசை தெய்வமாக தான் ஆராதிக்கப்பட வேண்டுமென்ற இளையராஜாவின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அந்த மனிதருக்குள் இருக்கும் உண்மையான ஒரு சில ஆதங்கங்கள் தாம் தீர்ந்தபாடில்லை! ‘உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அது அவசியமேயில்லை. என் கற்பனையும், நம்பிக்கையுமே எனக்கு உண்மை’ என வாழும் சில மனிதர்களின் பிரதிநிதி தான் இளையராஜா! ஒரு பத்திரிகையாளனாக உருவாவதற்கு முந்தியில் இருந்தே அவர் பெல்பாட்டம் அணிந்து சுற்றிக் கொண்டிருந்த அந்த இளமைக் காலம் முதல் அவரைப் பார்த்து வருகிறேன். அவரை சில ...

புலமைப்பித்தன் திராவிட இயக்கத்தின் தீப்பிழம்பாய், தென்றலாய் வெளிப்பட்டவர்! ஆழ்ந்த தமிழ் புலமையோடும், ஆர்ப்பாட்டமற்ற எளிமையோடும் வலம் வந்தவர். சற்றே நெகிழ்ந்து கொடுத்திருந்தால் இன்னும் ஆயிரம் பாடல்கள் எழுத வாய்ப்பு பெற்று இருப்பார்! ஆனால்,சென்டிமெண்ட் நிறைந்த சினிமா உலகில் பகுத்தறிவு சிங்கமாக இயங்கியது எப்படி..? மிக ஆழமான தமிழ்புலமையில் புலமைப்பித்தனை மிஞ்ச திரைக் கவிஞர்களில் யாருமில்லை எனலாம்! சங்கத் தமிழ் சந்தத் தமிழாக அவரிடம் வெளிப்பட்டது. திரைபாடல்களில் இலக்கிய நயத்தை பொழிந்தவர்! டப்பாங்குத்துப் பாடல்களோ, முகம் சுழிக்க வைக்கும் ஆபாச வரிகளோ இவர் திரைத் தமிழில் ...

எஸ்பி.பியின் மறைவைச் சுலபத்தில் ஒரு சம்பவமாகக் கடந்து செல்லமுடியவில்லை! நினைவு தெரிந்தது முதல் 50 ஆண்டுகளாக  கேட்டு பழகிய குரல்! அந்தக் குரல் காதுகளில் நுழைந்ததா? இதயத்தில் படர்ந்ததா…,ரகசியங்களைப் பரிமாறியதா…?மனதில் உற்சாகம் கரைபுரள வைத்ததா? கண்களில் கண்ணீர் வழிய வைத்ததா…?பயணங்களில் துணையாக வந்ததைச் சொல்வதா? இரவெல்லாம் தூக்கம் வரும் வரை துணை நின்ற கருணையை சொல்வதா? ’’நமச்சிவாய, நமச்சிவாய ஓம் நமச்சிவாய’’ எனப்பாடிய போது பக்தி மனநிலையில் மனம் கசிந்துருக வைத்ததை சொல்வதா…! அவரது மறைவு கோடிக்கணக்கான இசை ரசிகர்களை அதிர்ச்சியிலும், மீளதுயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. ...