சமூகத் தளத்தில் அழுத்தப்படும் பெண்களின் உணர்வுகளை மிகுந்த உயிர்ப்போடு பதிவு செய்வதில் வல்லவர். பாசம், பரிவு, பரிதவிப்பு, காதல், மோதல், பொறாமை, ஆற்றாமை..அனைத்தும் கொண்ட போலித்தனமில்லாத எளிய மனிதர்களை – அவர்களின் ஆன்மாவை – தனது எழுத்தில் வெளிச்சமிட்டு காட்டி 30 ஆண்டுகளாக எழுதி வருபவர் இமையம்! வெ.அண்ணாமலை (1964) என்ற இயற்பெயரைக் கொண்ட இமையத்தின்”செல்லாத பணம்” நாவலை, 2020 ஆண்டுக்கான விருதுக்கு, சாகித்திய அகாதமி தேர்ந்தெடுத்து உள்ளது. இதற்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசும், பட்டயமும் வழங்கப்படும். கொலைச் சேவல், சாவுசோறு, மண்பாரம், ...