கடுமையான பொருளாதார நெருக்கடி, தகுதிக்கு மீறிய ராணுவச் செலவுகள், ஊழல் நிர்வாகம்.. இதன் தொடர்ச்சியாக இம்ரான்கானின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது! மதவாத உணர்ச்சிகளைக் கடந்து, மக்கள் சரியான தலைவரை பாகிஸ்தானில் தேர்ந்தெடுப்பார்களா? ராணுவத்தின் சாய்ஸ் யார்? மக்கள் செல்வாக்கு இழந்துவிட்டார் இம்ரான்கான்! பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கெதிராக எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை இம்ரான் கட்சி உறுப்பினர்கள் சிலரே அணி மாறி ஆதரித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கான் பதவி இறக்கப்படுவார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், இம்ரானின் ” கடைசி பந்து ...