ஒருபுறம் உக்ரைனை உசுப்பிவிட்டுக் கொண்டே, மறுபுறம் பொருளாதார தடைகளை ஏற்படுத்தி, ரஷ்யாவை மண்டியிட வைக்க அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறாக முயற்சிக்கின்றன. இந்த சிக்கலில் இந்தியா மதில் மேல் பூனையாக தடுமாறுவது கேள்விகளை எழுப்பியுள்ளது. போர் நிறுத்தத்திற்கு உண்மையில் செய்ய வேண்டியது என்ன? கிட்டத்தட்ட இருபதாயிரம் இந்தியர்கள் (இவர்களில் மாணவர்கள் அதிகம்) உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்ற சூழல் உள்ளது. இவர்களுக்கு உதவ இந்திய அரசு முன் கூட்டியே எந்தவித முன்னேற்பாடும் செய்யாததால் நிலைமை மோசமடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய அரசின் மெத்தனப்போக்கை ...
கிரிப்டோ கரன்ஸி குறித்த அரசின் அணுகுமுறைகள் கருப்பு பண புழக்கத்தை கணிசமாக அதிகரிக்க எப்படி வழிவகுக்கும் என்பதையும், எளிய நடுத்தரப் பிரிவு மக்களை எப்படி நடுத்தெருவிற்கு இழுத்து வந்துவிடும் என்பதையும் சற்றே பார்ப்போம். ஒரு செயலை சரி-தவறு என்று சொல்வதற்குப் பல வருடங்கள் எடுத்து, இன்னமும் முடிவு எடுக்க முடியாமல், அல்லது எடுக்க விருப்பம் இல்லாமல் அந்த செயலை செய்பவர்களைப் பார்த்து உங்களுடைய செயலுக்குப் பணம் கொடுங்கள் என்று கேட்டால்? என்னவென்று சொல்வது. இதுதான் கிரிப்டோகரன்சி விஷயத்தில் நடந்து வருகிறது. கடந்த 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் ...
ஒரு நாடு உண்மையில் நாகரீகச் சிறப்புடன் இருக்கிறதா என்பதை அறிய அந்த நாட்டில் நூலகங்கள் எந்த லட்சணத்தில் இயங்குகின்றன என்பதே அளவுகோலாகும். தமிழ் நாட்டில் நூலகத்துறை கந்தல் கோலத்தில் கதியற்று கிடப்பதன் பின்னணி என்ன? பொது நூலகச் சட்டத்திலும் விதிகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ள உயர் மட்டக் குழுவை ஒன்றை முன்னாள் துணைவேந்தர் எம்.ராஜேந்திரன் தலைமையில் அமைத்துள்ளது தமிழக அரசு! பொது நூலகச் சட்டம்-1948 இயற்றப்பட்டு 70 ஆண்டுகளைக் கடந்த நிலையில், இன்றைய நவீனத் தகவல் தொழில்நுட்ப யுகத்தின் தேவைகளுக்கேற்பப் பொது நூலகங்களின் நடைமுறைகளைச் சீர்திருத்த ...
மநு நீதி காத்த சோழர்கள் காலத்தில் சாதியும் ,வருணமும் செழித்தன என்கின்றன ஆய்வுகள். தமிழகத்தில் 17 ஆம் நூற்றாண்டில் தலித்துகளின் பள்ளு இலக்கியம் தோன்றியுள்ளது. விவசாய வேலைகளில் இருந்த கொத்தடிமை நிலை அதில் வெளிப்படுகிறது. சமஸ்கிருத மொழியின் பாரம்பரியத்தில் வந்த மநு (அ)தர்மமத்தின்படி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்குப் பிரிவில் சூத்திரர்கள் அடிமைகள் ! ஆனால், பஞ்சமர்கள் எனப்பட்டவர்கள் மனிதர்களே அல்ல. விலங்குகளிலும் கீழாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர்களில் தமிழகத்தின் புதுரை வண்ணார்கள் போன்ற சில பிரிவினர் மற்றவர்கள் பார்வையிலேயே படக்கூடாது. ...
சுதந்திர தின சூழலில் பல எண்ண ஓட்டங்கள் மின்னலாய் தோன்றுகின்றன.கடந்து வந்த பாதையும், எதிர்கொண்ட சோதனைகளும் நம்கண்முன் விரிகின்றன. காலனி ஆதிக்கத்தை வீழ்த்தி விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியா ஒரு தனித்தன்மையுடன் திகழ்ந்தது. எண்ணற்ற கனவுகளுடன், நமது விதியை நாமே முடிவு செய்யும் அதிகாரத்தை பெற்ற நாம் , நமது விடுதலை இயக்கத்தின் குறிக்கோள்களை அடைய செம்மையான ஒரு முறைமையை ஏற்படுத்தவும் சூளுரைத்தோம். அதில் பெருமளவு வெற்றியும் கண்டோம். காந்தி, நேரு, பட்டேல், நேத்தாஜி, அபுல் கலாம் ஆசாத் மற்றும் அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமைகள் ...
அவருக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கட்சியில் ஒருவர் எந்த பொறுப்பில் இருந்தாலும் அல்லது தொடர்ந்து இருக்க வேண்டும் என்றாலும் அவர் தயவு தேவை என்கிறார்கள்! அவர் ஆட்சியில் எம்.எல்.ஏவும் இல்லை, அமைச்சரும் இல்லை, ஆனால், யாரும் எம்.எல்.ஏவோ அமைச்சரோ ஆக வேண்டும் என்றால், அவர் கடைக் கண் பார்வை தேவை என்கிறார்கள். அதிகாரிகள் முக்கிய பதவிகளை அடைவதற்கும் அவரையே நாடுவதாகத் தெரிகிறது. பெரும் தொழில் அதிபர்கள் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றாலும் அவர் வழியே அணுகுவதாக சொல்லப்படுகிறது. அதாவது அதிகாரம் ...