நீண்ட கால நெருங்கிய நட்பு நாடான ரஷ்யாவை பகைத்துக் கொள்ளும் வண்ணம் இந்தியா நடந்து கொண்டதானது இந்தியாவின் நம்பகத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. பாலஸ்தீனத்தை அழிக்கும் இஸ்ரேலுக்கு அதானியின் நிறுவனம் ஆயுத சப்ளை செய்து வருவதும் அதிர்ச்சி செய்தியாக விவாதிக்கப்படுகிறது; எப்போதும் மக்களுக்கு பயனற்ற பரபரப்பு செய்திகளிலேயே பெரும்பாலான ஊடகங்கள் ஆர்வம் காட்டும் வேளையில், அகில உலக ஊடகங்கள் ஒரு செய்தியை கசிய விட்டதை இந்தியாவில் ஒரு சில ஊடகங்களே ஒளி பரப்பின. அந்த செய்தி, “உக்ரைன் நாட்டு ராணுவத்திற்கு இந்தியா ஆயுதங்கள் ...