தீரா கொடுந்துயராக, முடிவுரா பிரச்சினையாக தமிழக மீனவர்கள் பிரச்சினை தொடர்வதற்கான காரணங்கள் என்ன? இந்த எளிய மனிதர்களின் உயிரை இந்திய அரசாங்கம் ஒரு பொருட்டாக மதிக்கத் தயாரில்லையா…? புதுக்கோட்டை கோட்டைபட்டிணம் மீனவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கையின் கடற்படை கப்பல் கொண்டு மோதி உயிரிழக்க வைத்த கொடூரத்தை நேரில் பார்த்த மீனவர்கள் சொல்லக் கேட்கும் போது இதயம் அதிர்கிறது! இலங்கை வைக்கும் குற்றச்சாட்டு இந்திய மீனவர்கள் எங்கள் எல்லைக்குள் வந்து எங்கள் கடல் வளத்தை கொள்ளையிட்டு செல்கின்றனர்! இதனால் எங்கள் பகுதி மீனவர்களின் வாழ்வதாரம் பறிபோகிறது! ...