விவசாயப் போராட்டத்திற்கான முழுமுதற் காரணிகள் அம்பானியும், அதானியும் தான்! அவர்களால் வடிவமைக்கப்பட்ட, மூன்று வேளாண் சட்டங்கள் தாம் பாராளுமன்றத்தில் அராஜகமாக பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது! அம்பானிக்கும், அதானிக்கும் சேவை செய்வதற்காகவே பாஜக அரசு தன் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது தான் என்றாலும், இந்த விவசாய திட்ட அமலாக்கத்தின் மூலம் அது சந்தேகமில்லாமல் நிருபிக்கப்பட்டுவிட்டது! அது தான் விவசாய சட்டங்களின் ஒவ்வொரு அம்சத்திலும் பிரதிபலிக்கிறது, மாநில அரசாங்கங்களின் A.P.M.C என்ற விவசாய உற்பத்தி பொருட்களின் விலையை ...