சொகுசான வேலை, நல்ல சம்பளம் என்று தகவல் தொழில் நுட்ப  வேலை கருதப்படுகிறது. ஆனால், திணிக்கப்படும் வேலைப் பளூ,  நிர்பந்திக்கப்படும் ராஜீனாமா, appraisal என்பதான அநீதி, மதம், சாதி, இனம், பால் என்பதன் பேரால் நிலவும் பாரபட்ச அணுகுமுறைகள்… போன்றவை குறித்து சொல்கிறார் ஐ.டி.தொழிற்சங்கத் தலைவர் அழகுநம்பி வெல்கின். இந்தியாவில், சென்னையில்தான் முதலில் மே நாள் ஊர்வலம் நடந்தது. ஆசியா கண்டத்தில், முதலில் பாண்டிச்சேரியில்தான் எட்டுமணிநேர வேலை சட்டமானது. இந்தியாவில்,  சென்னையில்தான் முதலில் கணிணியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகுதான் பெங்களூர், ...

ஜவுளித் தொழில் வரலாறு காணாத நெருக்கடியில் திணறுகிறது! பஞ்சு,நூல் விலைகள் ஆகாயத்தில்! நெசவாளர்கள் வாழ்வோ பாதாளத்தில்! கோடிக்கணக்கானோர்களுக்கு வாழ்வாதாரமான பருத்தி பஞ்சு, நூலின் விலையை தீர்மானிப்பது வர்த்தகச் சூதாடிகளா..? தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தரும் தொழில் ஜவுளித் தொழிலாகும்! சுமார் 31 லட்சம் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பியுள்ளன! இதில் விசைத்தறியால் 10.19 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கைத்தறியால் 3.20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் நூற்பாலைகள், பவர்லூம்கள், கூட்டுறவு சொசைட்டிகள் என பல ...