மோடி தகுதியற்றவர் என நிரூபணமாகிவிட்டது! ஒன்றும் செய்ய முடியவில்லை, நிலைமை கையை மீறி போய்க் கொண்டிருக்கிறது! திட்டமிடும் ஆற்றலும் இல்லை. செயல்படும் ஆற்றலும் இல்லை! பிரதமரின் தகுதியின்மை என்ற பேருண்மை விஸ்வரூபமெடுத்து நிற்கிறது…! கட்டமைக்கப்பட்ட அவரது பிம்பங்கள் நொறுங்கி சிதறுகிறது! இந்தியாவின் உண்மை நிலைகளையும், ஆட்சி நிர்வாகங்களின் இயலாமைகளையும் சர்வதேச மீடியாக்கள் அம்பலப்படுத்தி வருகின்றன! கொரானா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை! பரவலுக்கு ஏற்ப சிகிச்சை வழங்க முடியவில்லை! சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ வசதிகள் இல்லை! மருத்துவ பணியாளர்கள் தொடங்கி மருந்துகள், ஆக்சிஜன்..என அனைத்திலும் பற்றாகுறை. ...