கிராம சபை எப்போ நடக்கும், அங்கு நம் பிரச்சனைகளை விவாதித்து தீர்வு காணலாம்… என காத்திருந்த மக்களுக்கு, ஒருவழியாக மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அக்டோபர்-2 ந்தேதி கிராம சபை நடக்கும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியாகவே இருந்தது! ஆனால், கிராம சபை என்பது அரசியல் கட்சிகளின் தாக்கங்களுக்கு அப்பாற்ப்பட்டு இருக்க வேண்டும் என்ற மரபு மீறப்பட்டு வருவது கவலையளிக்கிறது! ஜனநாயகத்தில் மக்கள் பங்கேற்பு என்பதே பிரதானம், அந்த வகையில் கிராம சபையில் மக்கள் பங்கேற்று அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளை தெரியப்படுத்துவது, ஊராட்சியில் நடக்கும் ...