இன்றைக்கும் காந்தியம் எவ்வளவு வலிமையாக உயிர்ப்புடன் எப்படி எப்படியெல்லாம் பல தளங்களில் இயங்கி கொண்டு இருக்கிறது என்பதை நிதர்சனமாக்கி வரும் அரும்பெரும் காந்திய செயற்பாட்டாளர்கள் 11 பேர் பற்றிய சிலிர்க்க வைக்கும் உயிர்ப்பான பதிவு இது! இவர்கள் காந்தியின் சிந்தனைகளை,  நடைமுறையாக்கி,  வெற்றி பெற்ற ஆளுமைகள்! இவர்களை ரத்தமும், சதையுமாக பாலசுப்ரமணியம் முத்துசாமி பதிவு செய்துள்ளார். எளிமையும், நேர்மையும், மக்களின்பால் அக்கறையும் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் இன்னுமொரு காந்திதான் என்று இந்த நூல் சொல்கிறது. பாலா என அறியப்படும் பாலசுப்பிரமணியம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை ...