உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்குப் பகலில் வேலை, இரவில் உறக்கம் என்பது பொதுவான ஒன்றாகும். இது இயற்கை படைப்பு. ஆனால் இதில் மாற்றத்தைக் கொண்டு வந்தான் மனிதன். அது இரவு வேலை என்பதே ஆகும். பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இரவு தனியாக ஒரு ஷிபிட் அமைத்து வேலை செய்யும் சூழலை உருவாக்கினார்கள். இது செயற்கையான ஒன்றாகும். உண்மையில் இரவு கண்விழித்து வேலை செய்யும் சூழல் மனித உடலுக்கு இல்லை. ஆனால் அதை வலுக்கட்டாயமாக  உருவாக்கிக் கொண்டான்.  இங்குதான் மனிதனுக்கும் மற்ற சில உயிரினங்களுக்கும் வேறுபாடு உண்டாகிறது..  மனிதனைத் தவிர்த்து மற்ற உயிரினங்களில் 95 சதவிகிதம் பகல் செயல்பாடுகள் உடையவை. எலியை கொன்று ...