இந்தியாவிற்குள் தான் பாஜகவின் வெறுப்பு அரசியல் பாச்சா பலிக்கும்! இறை தூதரான நபிகள் நாயகத்தைக் கேவலமாகப் பேசியதால் 57 நாடுகளின் இஸ்லாமிய கூட்டமைப்பு ,வளைகுடா நாடுகள், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டித்தவுடன் பாஜக அரசு அதிர்ந்தது! ஏனென்றால், அதன் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாதவை! பிரபல “டைம்ஸ் நௌ”-Times Now- டி.வி. சேனலில் கடந்த மே மாதம் 26ந்தேதி ஒரு விவாதம் – தி கியான் வாப்பி ஃபைல்ஸ் என்ற தலைப்பில் – ஒளிபரப்பானது. இதில் பங்கெடுத்த திருமதி. நுபூர் ...