பிரதமர் மோடி திடீரென்று கல்வியாளர் அவதாரம் எடுத்து மாணவர்களிடம் கலந்துரையாடுகிறார். அதை இந்தியா முழுமையும் உள்ள மாணவர்கள் கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம்! ஆனால், மாணவர்களை இயல்பாக கேள்வி கேட்க விடுகிறார்களா? கேட்டால் என்னவாகும்..? பத்திரிக்கையாளர்களை பிரதமர் மோடி கடந்த ஏழு ஆண்டுகளில் ஒருமுறை கூட சந்தித்ததோ, பொதுமக்கள் சார்பான கேள்விகளுக்கு பதிலளித்ததோ இல்லை! அப்படிப்பட்ட பிரதமர் மாணவர்களுடன் ‘பரீக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் (தேர்வு பற்றி ஓர் விவாதம்) 2018 முதல் ஆண்டுதோறும் ஒரு ‘கலந்துரையாடலை’ நிகழ்த்துகிறார். குறிப்பாக ...