”சார், உண்மையா? திமுக தேர்தல் அறிக்கையில இப்படி சொல்லி இருக்காங்களா..? நீங்க திமுக தேர்தல் அறிக்கை பற்றி அவ்வளவு விலாவாரியாக எழுதினீங்களே..இதை எப்படி கவனிக்காமல் விட்டீங்க..’’ என்று பதறியவாறு  இரண்டு நாட்களாக எனக்கு வாட்ஸ் அப்பிலும், போனிலுமாக பலர் கேட்ட வண்ணம் உள்ளனர்! பகீரென்றது..இந்த விஷமத்திற்கான வித்து எங்கிருந்து… எப்படி விழுந்தது.. .? என்று பார்ப்போம்; ”இது ரொம்ப ஓவரா இருக்கே இப்படி சொல்ற கட்சி ஆட்சிக்கு வந்துட்டால் நாமெல்லாம் எப்படி கவரவத்துடன் வாழறது’’ என்று டீ கடையில் சூடு பறக்க விவாதம் செய்தவர் ...