கள்ளக்குறிச்சி மரணத்தை தமிழக காவல்துறை கையாண்ட விதமும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை அணுகும் விதமும் தமிழ் நாட்டின் காவல் துறையை வழி நடத்துவது தமிழக முதலமைச்சரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தலைமையா? என்ற சந்தேகம் வலுக்கிறது. மைக்கேல்பட்டி மாணவி மரணத்தில் தமிழக பாஜக நேரடியாக களம் கண்டது! ஆனால், இதில் ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து சதித் திட்டம் தீட்டி செயல்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை சுலபத்தில் அலட்சியபடுத்த முடியாது. உண்மையில் இந்தக் கலவரம் மக்களின் தன் எழுச்சியால் தான் உருவானது. அந்த பள்ளி நிர்வாகம் கடந்த ...