கருக் கலைப்பை மறுப்பதாலும், சிக்கலுக்கு உள்ளாக்குவதாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் மரணிக்கிறார்கள்! அமெரிக்காவில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதற்கு அங்கு பெண்கள் பொங்கி எழுந்துள்ளனர்! கருக்கலைப்பு என்பதை ஏன் பெண்ணின் உரிமையாக கருத வேண்டும்? அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பு செய்வது தொடர்பான சட்டத்தை, அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு அங்குள்ள பெண்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், நம் நாட்டில் கருக்கலைப்பு வசதிகள் ...
க.செபாஷ்டின், வேலூர் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு என்பது சாதியரீதியிலானது. கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் இடையிலான பிளவு என பிரபல பத்திரிகையாளர்கள் சிலர் கூறி வருகிறார்களே..? ஒ.பி.எஸ்சுக்கும், இ.பி.எஸ்சுக்கும் சாதிய அடையாளம் இருக்கிறது. சுய சாதி அபிமானமும் இருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும், இந்தப் பிளவுக்கும், சாதிக்கும் சம்பந்தமில்லை. முக்குலத்து சாதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ்… என ஏறத்தாழ அனைவருமே ஒ.பி.எஸ்சுக்கு எதிரான அணியில் தான் உள்ளனர். முக்குலத்து எம்.எல்.ஏவான ராஜன் செல்ப்பாவோ ஒ.பி.எஸ்சிடம் ”கட்சியில் ...
ஆண்மைக் குறை பிரச்சினையால நிறையபேர் அவதிப்படுறாங்க. பொதுவா பெண்மை, தாய்மை பற்றி பேசுற நாம ஆண்மை பற்றி பெருசா பேசுறதில்லை. ஆண்மைனா என்ன? ஆண்மைக்கு அளவுகோல் உண்டா? இதற்காக மருந்து, மாத்திரை, லேகியம், சூரணம் என்று அலைபாய்வது தேவையற்றது. ஆண்மை இல்லாத ஒரு மனுசனை இந்தச் சமூகம் எப்படி பார்க்குது? ஒரு ஆண்மகனால குழந்தை பெத்துத்தர முடியலன்னா அவனை எப்படி பார்ப்பாங்க? பெண்கள்கிட்ட தாய்மையை எதிர்பார்க்கிற மாதிரி ஆணிடம் ஆண்மை இருக்கான்னு எதிர்பார்க்கிறதுல என்ன தவறு? ஆண்மைல ஏற்படக்கூடிய குறைபாட்டுக்கு என்ன காரணம்னு நிறையவே ...
உத்திரபிரதேசத்தில் தலித்துகளுக்கான பகுஜன் சமாஜ் கட்சி சமீபகாலமாக பார்ப்பனர் நலன் சார்ந்து தீவிரமாக செயல்பட்டது! ‘இது பகுஜன் சமாஜா? பார்ப்பன சமாஜா?’ என்ற அளவுக்கு விமர்சிக்கப்பட்டது. சமீபத்திய தேர்தலில் அந்தக் கட்சியின் படுமோசமான வீழ்ச்சிக்கு இது காரணமா? பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே தலைவியான மாயாவதி விஸ்வரூபமெடுத்த போது, அவர் உ.பிக்கு மட்டுமல்ல, இந்திய தலித்துகளுக்கே தலைமை தாங்கி பெருந்தலைவராவார் என்ற எதிர்பார்ப்புகள் நிலவியது. ஆனால், ”இப்படியாக இந்திய தலித்துகளின் தாயாக வந்திருக்க வேண்டிய அவரோ, காலப் போக்கில் கால்மாறிப் பயணித்து பார்ப்பனப் பாசத்தில் ...
ஜனவரி- 3 முதல் 15 லிருந்து 18 வயதிற்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என்ற பிரதமர் மோடி அறிவித்துள்ளதை புகழ் பெற்ற ஆங்கில மருத்துவர்கள் பலர் ”இது அறிவியல் பூர்வற்றது, அவசர கதியிலானது, தேவையற்றது” என தெரிவித்துள்ளனர்! எதிர்ப்பு வலுக்கிறது! புகழ்பெற்ற எய்ம்ஸ் நிறுவனத்தின் மருத்துவர் சஞ்சய் கே ராய். இவர் கோவேக்சின் பரிசோதனை முயற்சிகளின் முதன்மை ஆய்வாளர். இவர் பப்ளிக் ஹெல்த் அசோஷேசியன் தலைவராகவும் உள்ளார். சிறுவர்களுக்கு கொரானா தடுப்பூசி குறித்து இவர் கூறும் போது, ”குழந்தைகளுக்கு கொரானா மிகவும் அரிதாகவே ...
மு.கருப்பசாமி, அருப்புக் கோட்டை, விருதுநகர் மாவட்டம் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? ஒரு ஆண் எத்தனை பெண்ணோடு தொடர்பு கொண்டவனாகத் தான் இருந்தாலும், தனக்கான மனைவி பத்தினியாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பான்! அதே போல கருணாநிதி எப்படிப்பட்ட ஊழல் செய்யும் தலைவர் என்பதை அருகிருந்து அணுவணுவாக உணர்ந்த போதிலும் தன்னை பொருத்தவரை ஒரு நேர்மையாளராக நிலை நிறுத்திக் கொண்டவர் சண்முகநாதன்! கருணாநிதியின் சாதனைகள் பலவற்றுக்கு அவரது மனைவி, மக்கள், சகாக்களை விட அதிக உறுதுணையாக இருந்த ஒரே நபர் ...
தெருவில் இறங்கி போராடும் களப் போராளி! அஞ்சாமையின் இலக்கணம்! மதவாத சக்திகளின் மாபெரும் விரோதி என்பதெல்லாம் சரி தான்! அதற்காக மம்தாவை அகில இந்திய தலைவராக – அடுத்த பிரதமராக – ஏற்க முடியுமா..? நாட்டிற்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே பேராபத்தாக பார்க்கப்படும் பாஜகவோடு மோதி வெல்லும் ஆற்றல் உள்ள இந்தியாவின் ஆகச் சிறந்த போராளி மம்தா பானர்ஜி என்பதில் நமக்கு மாற்று கருத்தே இருக்க முடியாது. ஆட்சியில் உள்ள எதிர்கட்சி முதல்வர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் பாஜகவிற்கு பணிந்து போகின்ற நிலையில், ...
அண்ணாத்தே படத்தின் அதீதமான வசூல் செய்திகள் ஏதோ இதில் இடிக்கிறதே ..என களத்தில் தள்ளியது..! கதைக்கு ஏற்றார் போல நடிகர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளும் படங்கள் பெரிய வெற்றி பெறுகின்றன! நடிகருக்காக கதை உருவாக்கப்பட்டு எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் பிளாப் ஆகின்றன! அந்த வகையில் அண்ணாத்தே படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இதை முதல் ஷோ பார்த்துவிட்டு வந்த ரஜினி ரசிகர்களே கழுவிக் கழுவி ஊத்திவிட்டனர். படம் பார்த்தவன் எல்லாம் தங்கள் எதிரிக்கும் கூட இந்த அனுபவம் ஏற்படக் கூடாது ...
கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்திடவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறார்! இதன் மூலம் தமிழ்நாட்டின் தண்ணீர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என முதல்வர் உள்ளிட்ட பலரும் நம்புகின்றனர். முதலில் இது சாத்தியமா? என்பதே கேள்விக்குறி தான்! இதன் உண்மை நிலைமையினை விரிவாகப் பார்த்தால் எத்தனை சர்ச்சைகள் ,சவால்கள்,சங்கடங்கள் புதைந்துள்ளன..என வியப்பளிக்கிறது! வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் இந்திய நதிகளை ஒருங்கிணைத்து – பல மாநிலங்களில் பெருமழை வெள்ளச் சேதங்களைக் குறைக்கவும், நாட்டின் ஒரு பகுதியில் கிடைக்கும் மிகை நீரை ...
இன்னும் எத்தனை காலம் தான் இப்படி சொல்லிக் கொண்டே இருக்க போகிறார்களோ..? அரசு கோப்புகளை தமிழில் பயன்படுத்த வேண்டும்! தமிழ் அரசாங்க அலுவலக பயன்பாட்டில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும்’’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்! இது ஏதோ ஒரு புதுத் தமிழ் மொழி புரட்சிப் போலத் தோன்றும். ஆனால், மெட்ராசு அலுவல் மொழி சட்டம் – 1956 என்பதன்படி தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 லேயே சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் ஜனவரி – 23,1957 ல் தமிழ்நாடு ...