”மோடிக்கு அடுத்தபடியாக தமிழ் நாட்டில் அதிக மக்களால் கடுமையாக வெறுக்கப்படுபவராக ஜக்கி வாசுதேவ்  தற்போது பார்க்கப்படுகிறார்.’’ என்று ஒரு கருத்தை இன்று இளம் பத்திரிகையாளர் ஒருவர் சொன்னார். எனக்கு திடுக்கென்றது. அவர் கருத்தை மற்ற சிலரும் ஆமோதித்தனர். இந்த சம்பவம் இன்று ஜக்கிக்கு எதிரான தெய்வத் தமிழ் பேரவை நடத்திய பிரஸ் மீட் முடிந்ததும் நிருபர்கள் மத்தியில் விவாதப் பொருளானது. யோகா, பிரணாயாமம் என்று அவர் இயங்கிய காலங்களில் அவர் மீது மக்களுக்கு பெரும் ஈர்ப்பு ஒரு கட்டத்தில் உருவானது. ஆனால், மிக பிரம்மாண்டமாக ...

ஆன்மீகம், யோக மார்க்கம் எனப் பேசி தன்னை முற்றும் துறந்த துறவியாக ஞான மார்க்கத்திற்கானவராக அடையாளப்படுத்தி வந்த ஜக்கி வாசுதேவும், ஈஷா யோகா அமைப்பினரும், இது வரை எந்த தேர்தல்களிலும் இல்லாத வகையில் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர்! தன்னுடைய ஓட்டு இந்த முறை யாருக்கானது என ஒரு பக்தரின் கேள்விக்கு விடை சொல்வது போல ஜக்கி, அவரது அரசியல் ஆதரவு பாஜக கூட்டணிக்கானது என்பதை தெளிவுபடுத்தி விட்டார்! தன்னுடைய ஐந்து அம்ச கோரிக்கைக்கு ஆதரவு அளிக்கும் கட்சிக்கே, தனது வாக்கு ...

என்னாச்சு இந்த யோகா குருவிற்கு…? அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டக்களமாக ( மார்ச்-26) தமிழகத்தின் பிரபல கோவில்களை மாற்றிவிட்டார் ஜக்கி! ‘’அரசாங்கமே கோவிலில் இருந்து வெளியேறு’’ என்று ஜக்கியின் ஆட்கள் கோஷம் எழுப்பியும், பேசியும் பக்தர்களிடம் பிரச்சாரம் செய்தனர். இவர்களுக்கெல்லாம் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது! ஆன்மீக, யோகா அமைப்பாக இருந்த ஈஷாவில் ஏற்பட்ட இந்த திடீர்மாற்றத்தின் பின்னணி என்ன? தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுமையும் லட்சக்கணக்கனக்கான மக்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி என்ற பிரணாயாமம் ஆகியவற்றை கொண்டு சேர்த்ததில் கடந்த கால் நூற்றாண்டாக பிரமிக்கதக்க ...