‘வீட்டுவேலை’  செய்யும் பெண்ணை  மையப்படுத்திய காதல்  கதை! ஒட்டிய தேகம்,ஒடுங்கிய முகம்,ஏழ்மையை பறை சாற்றும் தோற்றப் பொலிவு கொண்ட தன்மானமுள்ள ஒரு ஏழைப் பெண் எப்படி ஆசைக்கு இரையாகாமல், வாழ்க்கையை எதிர்கொள்கிறாள் என்ற கதையை ஒரு கவிதையைப் போல சொல்லி இருக்கிறார் இயக்குனர்! வாழ்க்கையையும்,சக மனிதர்களையும் சற்றே ஆழமாக புரிந்து கொண்டு மேம்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் இந்தப் படத்தை நிச்சயம் கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! வீட்டுவேலை செய்யும் பெண்களை  எத்தனையோ திரைப்படங்களில், தொலைக்காட்சித் தொடர்களில்  நாம் பார்த்திருப்போம். அதிகப் பிரசங்கியாக, கடன் கேட்பவளாக, உள் ...