இனி பெண்களுக்கு 21 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என சட்டம் கொண்டு வருகிறார்கள்! பல வகைகளில் இது நன்மையாக இருந்தாலும், நடைமுறையில் எல்லா சமூகத்திற்கும் சட்டம் சாத்தியப்படுமா..? என துளியும் யோசித்ததாகத் தெரியவில்லை. ஒரு பத்திரிகையாளராக, களப் பணியாளராக சமூகத்தின் பல தளங்களில் பயணப்பட்டவன் என்ற வகையில் இந்த சட்டம் பொதுப் படையாக பார்க்கும் போது சிறந்தது தான் என்றாலும், பெரும் பாலான மக்களால் மீறப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே உள்ளது என்பதே நிதர்சனம்! இன்றைய தினம் உண்ணும் உணவின் ...