தில்லி பல்கலைக் கழக மாணவர் உமர் காலிக் படிப்பில் கெட்டிக்காரர். கூடவே சமூக செயற்பாடு களிலும் ஆர்வமுள்ளவர். சிறந்த பேச்சாளர், வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்பட்டவர். இவரை உபா சட்டத்தில் சிறையில் தள்ளிவிட்டது பாஜக அரசு! இவர் செய்த தவறு என்ன? “அறிவார்ந்த, இளைஞனான உமர் காலித், கடந்த 20 மாதங்களாக அமைதியாக்கப்பட்டுள்ளார்” என்று, காந்தியின் பேரனான ராஜமோகன் காந்தி, ஒரு காணொளியை இந்த மாதம், அமெரிக்காவிலிருந்து வெளியிட்டுள்ளார். உபா சட்டத்தில், தில்லிச் சிறையில் அடைக்கப் பட்டுள்ள உமர் காலித்திற்கு பிணை இன்னமும் கிடைக்கவில்லை. ...