வீரம் செறிந்த விளையாட்டுத் தான்! ஆனால், இதில் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் விபரீதங்களை உயிர்பலிகளை, படுகாயமுற்று வாழ்க்கையை தொலைத்து முற்றிலும் நடைபிணமாகப் போகிறவர்களைக் குறித்து ஏன் மூச்சுவிட மறுக்கிறார்கள்..? வீர விளையாட்டு என பெயர் சூட்டி விபரீதங்களை வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறோம் என்று கூட தோன்றுகிறது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் வரை நடந்து கொண்டிருந்த ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு என்ற பெயர்களில் நடத்தப்பட்டு வந்த மாடுபிடி விளையாட்டு தற்போது திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக ...
எம்.கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம் , சென்னை ஒரே ஆண்டில் 157 கோடி தடுப்பூசி போட்டுவிட்டதாக ஒன்றிய அரசு பீத்திக் கொள்வதை கவனித்தீர்களா…? முதன் முதலாக ரசாயன உரங்களையும், வீரிய விதைகளையும் அறிமுகப்படுத்திய போது, இதே போல ஒரே ஆண்டில் …செய்த சாதனையின் தொடர்ச்சி தான் இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கை மலடாக்கிவிட்டது. நாட்டு மக்களை நிரந்தர நோயாளியாக்கிவிட்டது. தற்போது நாட்டு மாட்டுக்கு வெளி நாட்டு ஜெர்ஸியோட சினையை ஊசியில செலுத்தி, கம்பீரமான மாடுகளை ஒழித்து பதிலாக கலப்பின மாடுகளை உருவாக்குவது போல நம்முடைய இயற்கையான ...
மாட்டுப்பொங்கல் ஒரு அதிர்ச்சியான செய்தியை மக்களுக்கு சொல்லிச்சென்றது. எங்க ஊர் வந்தவாசியில் அந்தக் காலத்தில் உழவு மாடுகளும், பசுக்களும் அழகழகாக ஜோடித்து, தான் விரும்பும் கட்சிக்கொடிகலர்களை கொம்புகளில் தீட்டியும் 500 மாடுகளுக்கு குறைவில்லாமல் வரும் திடலில் இன்று 50க்கு குறைவான மாடுகள்?. அந்த மாடுகளில் நாட்டு காளைமாடுகளோ பசுக்களோ ஒன்றுகூட இல்லை. அனைத்தும் ஜெர்ஸி இனகலப்பின பசு மாடுகளே. இன்றைய விவசாயம் 100%டிராக்டர்,டில்லர்கள் மூலம் செய்யப்படுவதால் விவசாயப் பணிகளுக்கு நாட்டு ஆண்மாடுகள் தேவையற்றதாக மாறிக் கொண்டிருக்கிறது. மாட்டுச் சாணமே இயற்கை உரமாக பயன்பட்ட நிலத்தில் ...