ப.வ.தமிழரசன், சூலூர், கோயம்புத்தூர் ஒரு தலைசிறந்த பத்திரிக்கையளாராக வர என்ன செய்ய வேண்டும்? மானுட நேசமும், அறச் சீற்றமும், உண்மையைக் கண்டறியும் வரை சலிப்பில்லாத ஆர்வமும் கொண்டிருக்க வேண்டும். கே.எஸ்.கவின், மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஶ்ரீபெரும்புதூர் தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பட மத்திய அரசு அனுமதித்திருந்தால் இந்த நூறுகோடி இலக்கை விரைவில் எட்டி இருக்கலாம்தானே? இந்த நூறு கோடி இலக்கை யாருக்கு சாதகமாக எட்ட நிர்ணயித்தார்களோ.., அதன்படி மட்டுமே செயல்படுவார்கள்! கே.ராஜாராம், முகையூர், விழுப்புரம் திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதே..?ஆனால், திருவிழாக்கள், அரசியல் ...