போலித்தனம், பொய்மை, வாய்ச் சவடால், திறமையின்மை ஆகியவற்றின் அடையாளமாகிப் போன போரீஸ் ஜான்சன், பிரிட்டனை வரலாறு காணாத இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார்! ஊழல் அரசியல்வாதியை உடனே தூக்கி எறிந்தனர், பிரிட்டிஷ் மக்கள்! ஜான்சனின் மூன்றாண்டு ஆட்சி குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்! பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளுக்கும், விதி மீறல்களுக்கும் உள்ளான பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவழியாக தனது பதவியில் இருந்து விலகுவதாக வேண்டா வெறுப்பாக அறிவித்து விட்டார். 50க்கும் மேற்பட்ட தனது கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ராஜினாமா செய்து நெருக்கடி கொடுத்த நிலையில் ...