தமிழ்நாட்டில் இருக்கிற சினிமா நடிகர். நடிகைகள், அவர்கள் குடும்பத்தினர் ஆகியோர்களை வலைவீசி பிடித்து பாஜகவில் இணைப்பதே ஒரு பெரிய செயல்திட்டமாகக் கொண்டுள்ளார்கள் என தெரிய வருகிறது. கடந்த மூன்றாண்டுகளாக தமிழகத்தில் பாஜகவில் இணைந்த நடிகர்,நடிகைகள் பட்டாளத்தை பார்க்கும் போது பிரமிப்பாக உள்ளது! ஏன் சினிமாகாரர்களுக்கு மட்டும் பாஜக மீது ஒரு பாசம் பொத்துக் கொண்டு வருகிறது! இவர்கள் யாருமே பணம் தராமல் பிரச்சாரத்தில் ஈடுபடமாட்டார்கள்! சினிமாவில் சம்பாதிப்பதை அரசியலில் பிரச்சாரம் செய்தோ அல்லது ஏதாவது பதவி, செல்வாக்கு பெற்றோ அடையலாம் என்று தான் வருகிறார்கள்! ...

தன் அரசியல் எதிர்காலத்திற்கு தானே சூனியம் வைத்துக் கொண்டுள்ளார் குஷ்பு. அவரோடு பல ஆண்டுகளுக்கு முன்பே பழகியவன் என்ற வகையில் என்னால் உறுதியிட்டு சொல்ல முடியும் அவர் பாஜகவின் பிற்போக்கு அரசியலுக்குக் கொஞ்சமும் பொருத்தப்பாடில்லாதவர்! இயல்பிலேயே ஒரு பெண்ணியவாதியாக வெளிப்பட்ட அவர்,பிழைப்புவாத அரசியலுக்காக தன் இயல்புக்கு ஒத்துவராத பிழை செய்துள்ளார். யார் ஒருவருக்கும் கட்டிய கணவனோ,மனைவியோ சரியில்லை என்றால்,பொது வாழ்க்கை சறுக்கு பாதையில் தான் பயணப்படும் என்பதற்கு குஷ்புவே நிகழ்கால சாட்சியாகிறார். விபரமாகப் பார்ப்போம்… பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயம் அவர் திருமணத்திற்கு  முன்பான பெண்ணின் கன்னித்தன்மை பற்றி ஒரு ...