அகிலமெல்லாம் நாகரீகத்தின் உச்சத்திற்கு அடையாளமாக கருதப்பட்ட அமெரிக்கா, டிரம்ப்பின் அதிகார வெறி அத்துமீறல்களால் அநாகரீகத்தின் அடையாளமாக ஒரு கணம் தோற்றம் பெற்றது! வெள்ளை நிறவெறி சித்தாந்த மரபின் தொடர்ச்சியே டிரம்ப்! அந்த மரபின் உயர் அந்தஸ்த்தை நிலை நிறுத்த அவர்களால், ’’நமக்கு ஒரு இண்டர்நேஷனல் ரவுடி தேவை’’ என்ற நோக்கத்திற்காக அதிபராக்கப்பட்டவரே டிரம்ப்!   கறுப்பின பின்புலமும், இஸ்லாமியப் பின்புலமும் உள்ள ஒபாமாவுக்கு நவீன அமெரிக்கா அதிபர் அந்தஸ்த்து தந்து அழகு பார்த்தது! அதுவும் இரண்டு முறை தொடர்ச்சியாக அவர் நீடிக்கவும் முடிந்தது. இது ...