கொங்கு மண்டலத்தை பொறுத்த வரை செந்தில் பாலாஜி தான் திமுகவின் ஒற்றை முகம்! முடிசூடா மன்னன். அவர் வைத்ததே சட்டம்! இங்கே ஒட்டுமொத்த திமுகவும், ஆட்சி நிர்வாகமும் அவர் விரலசைவுக்கு கட்டுப்படும் போது, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மட்டும் மண்டியிட மறுப்பதா..? நகர்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசும் திமுகவும் கூட்டாக களம் கண்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தல் என்பதால் அந்தந்த மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் கூட்டணி கட்சிகளுக்கு இடையில் நடந்து வருகின்றன! தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் ...

எந்த ஒரு எம்.பியானாலும், மக்கள் நலத் திட்டங்களை மாநிலஅரசின் ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும்! மாநில அரசு என்றால், மாவட்ட ஆட்சியர் வழியாகத்தான் மக்களுக்கு நன்மைகளை கொண்டு சேர்க்க முடியும்! ஜோதிமணி அடிப்படையில் மக்கள் நலன் சார்ந்து செயல்படும் ஒரு சமூக செயல்பாட்டாளர்! கரூர் எம்.பி தொகுதியில் சுமார் 10,000 மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உபகரணங்களை கேட்டு காத்துள்ளனர். இந்த நிலையில் மாநில அரசால் மட்டுமே இந்த தேவைகளை நிறைவு செய்துவிட முடியாது! ஆகவே, அவர் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ...

மூன்று நாட்கள் ராகுல் காந்தி தமிழகத்தில் செய்த பிரச்சார சுற்றுப்பயணம் அவரைப் பற்றிய கூடுதல் புரிதல்களை நமக்குத் தந்துள்ளது! அவரது ஒவ்வொரு அசைவிலும் ஒரு வேகம் இருந்தது! அவரது ஒவ்வொரு சொல்லிலும் உண்மை இருந்தது! அது உதட்டிலிருந்தல்ல, உள்ளத்தில் இருந்து வந்தது என்பதை கேட்பவர்களால் உணர முடிந்தது! எளிமை, சக கட்சிக்காரர்களுடன் இணக்கம்,பேசக்கூடிய விஷயங்களில் அவருக்கு இருந்த தெளிவு,கமிட்மெண்ட்..எல்லாமே..அவர் ஒரு ’’பீப்பிள் பிரண்டிலி லீடர்’’ என்ற உணர்வை தந்து கொண்டே இருந்தது! ஒரு இளம் ஜவஹர்லாலை பார்க்கக் கூடிய உணர்வை தந்தது என்று கூடச் ...