வாசகர் ஆதரவால் மட்டுமே செயல்படக் கூடிய ஒரு இணைய இதழாக அறம் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது! உண்மைக்கான தேடல் கொண்ட வாசகர் பரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் அதே வேளையில் நமது சமரசமற்ற விமர்சனங்களால் தவிர்க்கவியலாமல் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகப்பட்டுவிடுகிறது, நாம் விரும்பாமலே! எனினும் அச்சம் காரணமாகவோ, தயவு காரணமாகவோ சமூக தளத்தில் உண்மை ஊமையாகிவிடும் நேரத்தில் யதார்தங்களை பேசாமல் நம்மால் அமைதி காக்க முடியவில்லை. அறம் தன் சமரசமற்ற விமர்சனங்களால் அரசியல், சமூக தளங்களில் தொடர்ந்து அதிர்வுகளை உருவாக்கி வருகிறது என்றாலும், பொருளாதார ...

முதல்வர் மருமகன் செல்வாக்கில் ஜீ ஸ்கொயர் நிறுவனம் ஆக்டோபஸாக விஸ்வரூபம்! கட்டுமானத் துறையே கதிகலங்கி நிற்கிறது! அதைக் கொண்டு ஜீனியர் விகடன் பிளாக் மெயில் செய்ததான புகார்! எப்.ஐ.ஆர் பதிவாகிறது! பாரம்பரிய நிறுவனமும், பத்திரிகை சுதந்திரமும் பேசு பொருளாகிறது! சந்தடி சாக்கில் குற்றவாளிகள் தப்பிக்கலாமா? ஜீ ஸ்கொயர் நிறுவனம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எடுத்த எடுப்பிலேயே அவசர கதியில் ஜீனியர் விகடன் உரிமையாளர் சீனிவாசன் மீதும், அவர் மனைவி மீதும் சம்பந்தமே இல்லாத யூடியுபர்கள் சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் மீதும் எப்.ஐ.ஆர் பதிவானது. இதன் ...

யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளர்களாக வரலாம்! அவர்களுக்கு பொது நலன் சார்ந்த நோக்கம்  வேண்டும் என்பது ஒன்றே நிபந்தனை. ஆனால், பத்திரிகையாளர் என்பதையே ஒரு அதிகாரமாகவும், தரகு வேலையாகவும், பிடுங்கி தின்னும் பிழைப்பாகவும் பயன்படுத்துவர்கள் இத் துறையில் பெருகி வருவது ஒட்டுமொத்த சமூகத்திற்கே ஆபத்தானது. அந்த வகையில் பிரஸ் கவுன்சில் இதற்கெல்லாம் தீர்வாக அமையுமா என்று பார்க்க வேண்டும். போலி பத்திரிகையாளர்களை களை எடுக்க, பத்திரிகையாளர் சங்கம் என்ற பெயரில் புற்றீசல் போல அமைப்புகள் தோன்றுவதற்கு முற்றுபுள்ளி வைக்க, அங்கீகாரமுள்ள பத்திரிகையாளார் அமைப்புகளில் முறையாக தேர்தலை ...