‘’சார், தினமலர்ல இருந்து பேசறோம்..இந்த..ஆ.ராசா..இப்படி ஆபாசமா பேசியிருக்காறே..அதப் பத்தி என்ன நினைக்கிறீங்க…?’’ ‘’என்ன பேசியிருக்கார்..தெரியலையே.. அதாங்க…,முதல்வர் இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றி ஆபாசமா பேசியிருக்கார்..அது பற்றி உங்க கருத்து வேணும்’’ ‘’நான் பார்க்கலையே எனக்கு ஒன்னும் தெரியாது…’’ ‘’அதான்ங்க..இன்னைக்கு எங்க தினமலரில் கூட போட்டு இருந்தோமே..உங்களுக்கு வேணா வாட்ஸ் அப்பிலே அனுப்புகிறோம்..படிச்சுட்டு சொல்றீங்களா…’’ ‘’நீங்க தினமலரா? இதுக்கு முன்னாடி எந்தெந்த விவகாரத்திற்கெல்லாம் எங்கிட்ட கருத்து கேட்டீங்க..எதுவுமே கேட்டதில்லை. இது என்ன புதுசா கேட்கிறீங்க..’’ ‘’அப்படி இல்லீங்க..அரசியல்ல கண்ணியமா பேசணுமில்லையா..ஆனா, அவரு கண்டபடி இ.பி.எஸ்சோட அம்மாவைப் பற்றித் ...