‘இஸ்லாமியராக இருப்பதே குற்றமாகிவிடுமா?’ என்று கேட்கப்படுகிறது. கேரளாவை சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் காப்பன் செய்தி சேகரிக்க செல்லும் போது கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சிறையில் அடைபட்டு உள்ளார். பிணையும் மறுக்கப்பட்டு வருகிறது. காரணம் என்ன? புகழ்பெற்ற கார்டூனிஸ்ட்டான ஆர்.கே.லட்சுமணன், எப்போதோ வரைந்த படங்கள், இப்போதும் பொருத்தமானவையாக பத்திரிகைகளிலும், இணையத்திலும் உலா வந்து கொண்டு  இருக்கின்றன. ஒருவரின் கழுத்தின் பின்புறம் கையை வைத்து, காவல்காரர் அழைத்துச் சென்று கொண்டிருப்பார். ‘நான் உண்மையைத்தானே சொன்னேன்’ என்பார் அவர்.  ‘அதனால்தான் உன்னை கைது செய்திருக்கிறேன்’ என்று பதில் ...

அடுத்தடுத்து தினமணியின் இளம் பத்திரிகையாளர்கள் பகீர் மரணம் அடைகின்றனர். இது விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்! இந்த மரணங்களுக்கான பின்னணியில் மர்மப் புன்னகை சிந்துகிறார் அதன் ஆசிரியராக அறியப்படும் வைத்தியநாதன்! இலக்கிய மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் பெரிய மனிதராக தோற்றம் காட்டி, தமிழ்த் தாயின் தவப்புதல்வன் போல தன்னைத் தானே அடையாளப்படுத்தி திரியும் வைத்தியநாதனுக்கு இவ்வளவு ஆபத்தான இன்னொரு முகம் இருக்குமா..?  அறிவுத் தளத்தில் அராஜக எஜமானத்துவத்துடன் ஒருவரால் எப்படி இயங்க முடிகிறது என்பது வியப்பளிக்கிறது! தமிழ்நாட்டில் தினமணி நாளிதழுக்கென்று தனி மரியாதை ...

பத்திரிகை பணியை மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டமாக வைத்துக் கொள்பவர்கள் மிகச் சிலரே! அவர்களில் முக்கியமானவர் பி.சாய்நாத்! எளிய மனிதர்களின் பாடுகளை சொல்வதற்கும், கிராமப்புற ஏழை எளிய விவசாயிகள் வாழ்க்கையை பதிவு செய்யவும், மூலை முடுக்கெல்லாம் பயணித்து எழுதியுள்ளார்! பரபரப்பு, மலினமான ரசனைகள்,அரசியல் சார்பு நிலை,லாப நோக்கம் ஆகிய அம்சங்களாக பத்திரிகைதுறை வீழ்ந்துபட்டுள்ள நிலையில் சாய்நாத் போன்ற முன்னோடிகளே இன்று நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றனர். தற்போது ஜப்பான் நாட்டின் சர்வதேச விருதான ஃபுகுவோகா கிராண்ட் விருதுக்கு தேர்வாகி உள்ளார் பி.சாய்நாத்! தற்போது 64 ...