இன்றைய பாஜகவில் கிட்டத்தட்டபாதிப்பேர் காங்கிரசில் இருந்து போனவர்கள்! இன்னும் சிலர் தேதி பார்த்துள்ளனர்! உ.பி.தேர்தலில் பிரச்சாரத்திற்கு காங்கிரசின் முக்கிய தலைவர்கள் போகாதது ஏன்? சித்தாந்த ரீதியாக காங்கிரஸின்  நீண்டகால கொள்கையாளர்களுக்கு ஏன் முக்கிய பதவிகள் கொடுக்கப்படுவதில்லை. சமீபத்திய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை கணக்கில் எடுத்து பார்த்தால் விரல்விட்டு எண்ணத்தக்க ஓரிவரைத் தவிர அனைவரும் முதியோர்களாகவே இருந்தனர்! காங்கிரஸ் ஓய்வு தேடும் முதியோர் இல்லமாக காட்சியளிப்பது தெரிந்தது. பிரியங்கா காந்தி பேசும் போது, உத்திரபிரதேச தேர்தலை எதிர் கொள்வதில் பாஜக தலைவர்கள் ...