என்கெளண்டர்களை கேள்விக்கு உட்படுத்துவதா? காவல்துறை சித்திரவதைகளை தட்டிக் கேட்பதா? ரவுடிகளுக்கு புரியும் மொழியில் மட்டுமல்ல, மனித உரிமை ஆணைய நீதிபதிக்கு புரியும் மொழியிலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும் …என சம்பவங்கள் நடக்கின்றன!  என்ன நடக்கிறது இங்கே? – நீதிபதி ஹரிபரந்தாமன் தமிழ்நாட்டில் மனித உரிமைகள் மீறப்பட்டு, எளியோர் பாதிக்கப்படும் போது அதை தட்டிக் கேட்டு நிவாரணம் வழங்குவதற்கான ஆணையமே மனித உரிமை ஆணையம். அந்த ஆணையத் தலைவரின்  மனித உரிமையே  மீறப்படும் வகையில் தமிழக காவல்துறை செயல்படுகிறது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத் தலைவர் ...