நெருப்பை போல தங்களை தூய்மையாக – ஆசைகள் அண்டாதபடிக்கு –தங்களை வைத்துக் கொள்ள வேண்டியவர்கள் நீதிபதிகள்! ஆனால், அரசியல் சட்டம் அவர்களுக்கு தந்துள்ள அதீத பாதுகாப்பு கவசங்களை தவறாக பயன்படுத்திக் கொண்டு, ‘நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது’ என இறுமாந்து இருப்பார்கள் எனில்… சபாஷ்! அலகாபாத் பார் கவுன்சில் வழக்கறிஞர்களின் அறச் சீற்றத்திற்கு! ”அலகாபாத் நீதிமன்றம் என்ன குப்பைத் தொட்டியா..?” ஒரு நீதிபதியின் இடமாற்றத்தை எதிர்த்து இவ்வாறு கேட்கும் துணிச்சல் என்பது அசாத்தியமானது. டெல்லி உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி யஷ்வந்த் வர்மா ...