ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான எழுத்துக்களால் நம் உள்ளங்களை வென்றெடுத்தவர்! யாரும் பேசத் தயங்கும் விஷயங்களையும், எழுதத் துணியாத வாழ்க்கையையும் அவர் எழுத்தில் வடித்தார்! கரிசல் மண்ணின் மனிதர்களையும். அவர்களின் மரபுகளையும் அவர்களின் பேச்சு மொழியிலேயே பதிவு செய்தது மட்டுமா..? அவரின் சாதனைகள், வெற்றிகளின் ரகசியம் என்ன..? ஒரு சின்னஞ் சிறு குக்கிராமம், படிப்பறிவில்லா மக்கள் நிறைந்த வாழ்க்கைச் சூழல், ஏழாம் வகுப்பு மட்டுமே கல்வி..! இந்தப் பின்புலம் கொண்ட இலக்கிய உலகில் கி.ரா என்று அறியப்பட்ட கி.ராஜநாராயணன், மகத்தான எழுத்தாளராக மாறியது என்பதின் ரகசியம் ...