இது கொரானா தடுப்பூசிக்கு எதிரான பதிவல்ல. அவரவர்கள் தங்கள் சொந்த பட்டறிவையும், பகுத்தறிவையும் சார்ந்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்! ஆனால்,சில நிதர்சனங்களை புறம் தள்ளாதீர்கள் என சொல்வதற்காகவே இதை எழுதுகிறேன். கே.வி.ஆனந்த் மிக சமீபத்தில் தான் கொரானா தடுப்பூசி முதல் டோஸ் போட்டார்! அது போடும் வரை உற்சாகமாக இருந்தவர் போட்ட பிறகு உடல் நலன் குன்றியுள்ளார். இதற்கு முன்பில்லாத வகையில் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமமும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை சென்று சோதித்ததில் அவருக்கு கொரானா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ரத்த உறைதல் ஏற்பட்டதா..? எனத் தெரியவில்லை. ...
அதிர்ச்சியில் இருந்து மீள சில மணி நேரங்கள் ஆனது! ஒளிப்பதிவில் கவிதை பாடியவன்! அவன் ஒளிப்பதிவில் காட்சிகளை காண்கையிலேயே கவிதை அனுபவத்தை பெறலாம்! பிரேம் பை பிரேம் கவிதை தான்! இன்றைக்குள்ள இயக்குனர்களில் அதிக வாசிப்பு பழக்கம் உள்ளவர். 1988 தொடங்கி 33 ஆண்டுகள் ஒரே சீரான நட்பை இருவரும் பராமரித்தோம்! போட்டோ ஜர்னலிசம் தான் எங்கள் இருவரையும் இணைத்தது.ரொம்பவும் எனர்ஜடிக் மனிதன்.தான் இருக்கும் இடத்தை உற்சாகமாவும்,உயிர்ப்பாகவும் வைத்திருக்கும் கலை அறிந்தவன்! அசைட் பத்திரிகை மூலம் தான் எங்கள் நட்பு உருவானது! அப்போது தான் ...