கருணாநிதி இயல்பானவர், எளிதில் அணுக முடிந்தவர், ஜனநாயகத் தன்மை கொண்டவர்! 1985 தொடங்கி அவரை பின் தொடரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது! எம்.ஜி.ஆர் ஆட்சியில் கலைஞர் தலைமையில் எதிர்கட்சிகள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது மெரீனா சீரணி அரங்கில்! அதில் நல்லக் கண்ணுவும் கலந்து கொண்டு பேசினார். அப்போது கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய அணியின் தலைவராக நல்லக்கண்ணு இருந்தார்! கலைஞர் பொதுக் கூட்டத்தில் நல்லக்கண்ணு பேசிய புகைப்படம் முதன்முதலாக நான் எடுத்து ஜனசக்தியின் முதல் பக்கத்தில் பிரசுரமானது! அதற்குப் பிறகு ...
பொதுவுடமைப் போராளி என்ற மிடுக்கோடும், எழுத்தாளன் என்ற ஞானச் செருக்கோடும், முன்கோபம்,முரட்டுத் தனம் ஆகிய இயல்புகளோடும், அதிரவைக்கும் நகைச்சுவை உரையாடல்களுடனும் நம்மோடு வாழ்ந்த இளவேனில், மறைந்துவிட்டார் என்ற செய்தியை ஏற்கமுடியாதவனாகவும், இனி அவரை பார்க்க இயலாதே என்ற ஏக்கம் கொண்டவனாகவும் இந்த கட்டுரையை எழுதுகிறேன்! அவருடைய எழுத்து மட்டுமல்ல, பேச்சும் வசீகரமானது தான்! சாதிகளுக்கு அப்பாற்பட்ட பொதுமனிதனாக இறுதி வரை வாழ்ந்தவர் இளவேனில்! ஒரு முறை இவரை ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடையாளப்படுத்த சிலர் முனைந்தபோது சொன்னார், ” எனது தாத்தா பிள்ளைமாரு, பாட்டி ...
ஒரு மாலை நேரம் ஜெயகாந்தன் இல்லம் சென்றேன்.”தோழர், முன்பு ‘ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்று துக்ளக்கில் எழுதினீர்கள்.அது 1973 ல் எழுதினீர்கள். அதற்கு பின்பு எவ்வளவோ அரசியல் அனுபங்கள் ஏற்பட்டிருக்குமல்லவா?அதை நீங்கள் எழுதலாமே என்றேன். உடனே அவரிடமிருந்து வேகமாக ஒரு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் வரும் என நான் எதிபார்க்கவில்லை. “ஆமாம், நல்ல யோசனை! சோவிடம் பேசட்டுமா?”என்றவர், செல்போன் எங்கே என சுற்றும்,முற்றும் பார்த்து,தேட தொடங்கியதும், தோழர்,ஒரு நிமிஷம்,துக்ளக்கில் நீங்க இப்ப எப்படி எழுத முடியும்..?என்றேன். ”ஏன்..? என்றார். “இல்ல தோழர், முன்பு நீங்கள் ...