காளியம்மன் குறித்த லீனா மணிமேகலை வெளியிட்ட போஸ்டர் குறித்து இந்து சனாதனிகள் கொந்தளிக்கின்றனர். அவரவர் விருப்பப்படி கடவுளை கற்பிதம் செய்து கொள்ளும் வழிமுறை நமது பாரம்பரியத்தில் காலம் காலமாக உள்ள ஒன்று தான்! சனாதனிகள் வைத்ததே சட்டமாகிவிடுமா? காளி புகை பிடிப்பதைப் போலவும் பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொடி ஒன்றை பிடித்திருப்பதுமான உள்ள காளி தேவியின் படம் அது! இது குறித்து தான் சனாதனவாதிகள் கொந்தளிக்கின்றனர். ”காளிதேவியை இழிவுபடுத்திவிட்டாய் விட்டேனா பார் உன்னை!” ”தலையை வெட்டுவேன், கண்டந்துண்டமாகக் கொலை செய்வேன்” என ஆளாளுக்கு பேசியுள்ளனர். ...