இன்னும் கூட தன் தோல்வியை ஏற்க மறுத்து டிரம்ப் சட்ட போராட்டம் நடத்தப் போவதாக சொல்கிறார்…! அகில உலகமும் ஒரு உண்மையை ஒப்புக் கொண்ட போதும் அதை தான் மட்டும் ஏற்க முடியாது என்று டிரம்ப் பிடிவாதம் காட்டுகிறார் என்றால், அது ஏதோ அவர் இப்போது தான் அப்படி சொல்வதாக நினைத்து விடக் கூடாது! அவருடைய கடந்த கால வரலாறுகளை பார்த்தால், அது, ’தான் திருடன் பிறரை நம்பான் கதை’யாகத் தான் இருக்கிறது! ’’பிராடுத்தனம் என்பது ரொம்ப,ரொம்ப பொதுவானது, சகஜமானது தானே..’’ என்பது தான் ...
“இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க” இந்தக் குரலை நீங்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது. உயர்தொழில்நுட்பம் படித்து, கனவு நாடான அமெரிக்காவுக்குச் சென்று, அதுவும் முன்னேறிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தியர்கள் சாதிப் பாகுபாடுகளை கடைப்பிடிக்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? “இப்பல்லாம் எங்க சார் சாதி பாக்குறாங்க” என இதனை எளிதாக கடந்துவிட முடியாது. அமெரிக்க நாட்டில் உள்ள மாகாணங்களில் ஒன்று கலிபோர்னியா, இந்த மாகாணத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதித்துறை, சிஸ்கோ என்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்துக்கு ...